Pages

Tuesday, October 18, 2016

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட். சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகம்


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் இளங்கல்வியியல் (பி.எட்.) படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது. இந்த விண்ணப்ப விற்பனையைத் துணைவேந்தர் க. பாஸ்கரன் தொடக்கி வைத்தார். இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் ச. முத்துக்குமார் தெரிவித்திருப்பது:

இப்பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் நடத்தப்படும் இளங்கல்வியியல் (பி.எட். 2 ஆண்டுகள்) படிப்பில் 500 இடங்களுக்கு 2017-18-ம் ஆண்டுக்கான (நாள்காட்டி ஆண்டு) சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் முடித்து ஆசிரியராகப் பணியாற்றி வருபவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம் இளங்கல்வியியல் பயில விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ரூ. 600 செலுத்தி நேரிலோ அல்லது www.tamiluniversity.ac.in என்ற இணையதள முகவரியிலோ பெறலாம். விண்ணப்பத்தை நிறைவு செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் நவ. 30-ம் தேதி.

No comments:

Post a Comment