Pages

Saturday, September 10, 2016

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு செல்ல தடை


இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், மாற்று ஆசிரியர் வரும்வரை பிற பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் 6ம் தேதி கலந்தாய்வு தொடங்கி கடந்த வாரம் முடிந்தது. இதில் இடஒதுக்கீடு பெற்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு இடமாறி வருகின்றனர். ஆசிரியர்கள் புதிய இடங்களுக்கு மாற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒரே பள்ளியில் இருந்து அதிக ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால் அவர்களை உடனே மொத்தமாக இடம்மாற்ற செய்ய அனுமதிக்கக்கூடாது. 3ல் 2 பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும். இதுகுறித்து முடிவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்கவேண்டும். தெலுங்கு, மலையாளம், உருது போன்ற பிறமொழி கற்றுத்தரப்படும் அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால், மற்றொரு தமிழ் ஆசிரியர் வரும் வரை அவரை விடுவிக்கக்கூடாது. அனைத்து பள்ளிகளிலும் மாற்று ஆசிரியர்கள் வந்த பின்பே ஆசிரியர்கள் இடமாற அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தெரிவித்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment