Pages

Friday, September 16, 2016

ஆதார் எண் பதிவுக்கு செப். 20 வரை 'கெடு'


அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வரும், 20ம் தேதிக்குள், மாணவர்களின், 'ஆதார்' எண் பட்டியலை வழங்குமாறு, பள்ளிக்கல்வித் துறை, 'கெடு' விதித்துள்ளது. தமிழகத்தில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் பெயர் மற்றும் விபரங்கள், 'ஆன்லைன்' முறையில், 'எமிஸ்' என்ற மின்னணு ஆளுமை திட்டத்தில் இணைக்கப்படுகிறது; இதில் மாணவர்களுக்கு தனியாக, ஒரு அடையாள எண் வழங்கப்படும்.

இந்த பதிவுக்கு, ஒவ்வொரு மாணவருக்கும், ஆதார் எண் மிகவும் அவசியம்.ஆனால், தமிழகத்தில் படிக்கும், 1.25 கோடி மாணவர்களில், இன்னும், 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, ஆதார் எண் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், எமிஸ் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், செப்., 20க்குள் பதிவு செய்து, அதன் பட்டியலை அனுப்புமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment