Pages

Wednesday, August 03, 2016

ஏ.இ.இ.ஓ.,சீனியாரிட்டி பட்டியல் : 33 தலைமை ஆசிரியர்கள் நீக்கம்


உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதலுக்காக தயாரிக்கப்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் சீனியாரிட்டி பட்டியலில் இருந்து 33 பேரை கல்வித்துறை நீக்கியது. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கவுன்சிலிங் நேற்று துவங்கியது.

இன்று நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுவதற்கான கவுன்சிலிங் நடக்கிறது. இதற்கான நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அடங்கிய சீனியாரிட்டி பட்டியலை தொடக்கக் கல்வி இயக்குனரகம் ஜூலை 1 ல் வெளியிட்டது. இதில் 31.5.09 க்குள் துறைத் தேர்வில் தேர்ச்சி அடைந்த 257 பேர் இடம் பெற்றனர். இந்த பட்டியலில் தகுதியான சிலரது பெயர்கள் விடப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மீண்டும் அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மூலம் புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதில் 33 பேரை நீக்கி தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த காலங்களில் கவுன்சிலிங்கில் பங்கேற்காதோர், ஏற்கனவே பணிமாறுதல் விரும்பாமல் கடிதம் கொடுத்தோர் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பதில் பிரச்னை இல்லை,' என்றார்.

No comments:

Post a Comment