கடந்த மார்ச் மாதம் நடந்த 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வு நடந்தது. அதில் 60 ஆயிரத்து 79 தனித் தேர்வர்கள் எழுதினர். தேர்வு முடிவுக்கு பிறகு மறுகூட்டல் செய்யக் கேட்டு 644 பேர் விண்ணப்பித்தனர். இதன்படி 1310 விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டன. அவற்றில் 6 பேருக்கு மதிப்பெண் மறுகூட்டலில் மாற்றம் உள்ளது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றுகள் www.tndge.in என்ற இணைய தளத்தில் இன்று பிற்பகலில் வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment