சுற்றறிக்கை
தோழர்களே,
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையால் வெளியிடப்பட்டுள்ள TR சுப்ரமணியம் குழுவின் புதிய கல்விக் கொள்கையில் முக்கிய தகவல்கள் மூடிமறைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடத்திட்டம் போன்றவற்றில் உள்ள பிரச்சினைகள இந்த தேசத்தின் மீது அக்கறை கொண்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் மக்களிடையே கொண்டு செல்லும் பணியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு ஆசிரியர் அமைப்புகள், மாணவர்அமைப்புகள், கல்வியாளர்கள் உள்ளடக்கிய ஒரு கருத்தரங்கம் வரும் 30/07/2016 சனிக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் மணி அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்துகிறார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு கல்வி நலன் காப்பதில் அதிகமான பங்கு உள்ளதால் நடக்கவிருக்கும் சென்னை கருத்தரங்கத்தில் வட்டாரச்செயலாளர், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்றிட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பாளர்களின் பங்கேற்பினை உறுதி செய்திட வேண்டும். கலந்து கொள்ள வரும் தோழர்கள் சென்னை மாநில அலுவலகத்தில் வருவதை கூடுமானவரை தவிர்த்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செ. பாலசந்தர், பொதுசெயலாளர். TNPTF.
Pages
▼
No comments:
Post a Comment