Pages

Monday, July 04, 2016

மாறுதல் கலந்தாய்வு எப்-போ-து? : ஆசிரியர்கள் போராட முடிவு-DINAMALAR


ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தாததை கண்டித்து, வரும், ௮ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, கூட்டணியின் நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில், மே மாதத்தில், ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு இடமாறுதல் வழங்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாளிலேயே, ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். கற்பித்தல் பணி பாதிக்கப்படவில்லை.

ஆனால், கடந்த ஆண்டு, பள்ளி திறந்த பின்னே, கலந்தாய்வு நடந்தது; கற்பித்தல் பணியும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டும், பள்ளி திறந்து ஒரு மாதமாகியும் கலந்தாய்வு நடத்துவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இதை கண்டித்து, ௮ம் தேதி, உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment