பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் இறுதிக்குள் இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தொழில் துறை மற்றும் போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் சி.வி.சங்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: போக்குவரத்து கழகங்களின் வருவாயை பெருக்கிட, அனைத்து பேருந்துகளையும் தினமும் சரியான நேரத்தில் இயக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட அனைத்து வழித்தடத்திலும் தடையில்லாமல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2016-17ம் கல்வி ஆண்டிற்கான இலவச பயண அட்டைகளை மாணவர்களுக்கு அடுத்த மாதம் இறுதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Pages
▼
No comments:
Post a Comment