Pages

Wednesday, July 27, 2016

ஆசிரியர் கவுன்சலிங்கில் தொடரும் அதிரடி 2 பேருக்கு மேல் மியூச்சுவல் டிரான்ஸ்பர் கிடையாது


பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்குகிறது. அதில் தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளன.

இதையடுத்து, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கவுன்சலிங் நேரத்தில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தொடக்–்க கல்வி இயக்குநர் அவசர உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, மனமொத்த மாறுதல் உத்தரவு வழங்கும் நேரங்களில் 7 வகையான நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. 2016-2017ம் கல்வி ஆண்டில் ஓய்வு பெற உள்ள, பதவி உயர்வில் செல்ல உள்ள ஆசிரியர்களுக்கு தற்போதைய பதவியில் மனமொத்த மாறுதல் கேட்கக் கூடாது.

மனமொத்த மாறுதல் அடிப்படையில், மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் ஏற்கெனவே பணிசெய்த பள்ளிக்கே மனமொத்த மாறுதலில் செல்ல அனுமதிக்க கூடாது. மனமொத்த மாறுதல் கேட்கும் இரண்டு ஆசிரியர்களும் 1.6.15க்கு முன்னரே, தற்போது உள்ள பள்ளியில் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கிடையாது.

மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கேட்கும் விண்ணப்பங்களை 2.8.16ல் தொடக்க கல்வி இயக்ககத்துக்கு கொண்டு வந்து அதே நாளில் அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய விண்ணப்பங்களை பெற்றுச் செல்ல வேண்டும். மனமொத்த மாறுதல் உத்தரவுஎன்பது அந்தந்த பதவிகளுக்கு பொதுமாறுதல் கவுன்சலிங் அட்டவணைப்படியே அதே நாளில் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தொடக்க கல்வி இயக்குநர் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment