Pages

Saturday, July 23, 2016

டிப்ளமோ ஆசிரியர் பயிற்சிக்கு நாளை முதல் 2ம் கட்ட விண்ணப்பம்


இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பான, டி.டி.எட்., டிப்ளமோ படிப்பில் சேர, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர் பணிக்கு பிளஸ் 2 முடித்து டி.டி.எட்., படித்திருந்தால் போதும். தமிழகத்தில், அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கட்டுப்பாட்டில், 396 டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் உள்ளன.

இவற்றில், 13 ஆயிரத்து, 800 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு ஏற்கனவே ஆசிரியர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடந்தது. அதில், 3,500 பேர் விண்ணப்பித்து, 1,000க்கும் குறைவானவர்களே இப்படிப்பில் சேர்ந்தனர். காலியாக உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதன்படி, இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. பிளஸ் 2 சிறப்பு உடனடி துணைத் தேர்வு முடிவுகள், இரு தினங்களுக்கு முன் வெளியான நிலையில், டிப்ளமோ படிப்பில் சேர உள்ள மாணவர்கள், நாளை முதல் விண்ணப்பிக்கலாம். வரும், 8ம் தேதி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நடக்கும். 'விண்ணப்பங்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கிடைக்கும்' என, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment