Pages

Tuesday, May 24, 2016

பத்தாம் வகுப்பு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 28) வரை விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, தேர்வர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய சனிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம். தனிதேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய பள்ளி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத்துக்கு ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு ரூ. 205-ம் மறுகூட்டலுக்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மறுகூட்டலுக்குக் கட்டணம் செலுத்தும் முறை:

மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே மறுகூட்டல் முடிவுகளை தேர்வர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment