தேர்தல் கமிஷன் சார்பில், ஓட்டுச்சாவடி அலுவலர், வீடு வீடாகச் சென்று, பூத் சிலிப் வழங்குவார். இப்பணியானது, தேர்தல் பார்வையாளர் மேற்பார்வையில் நடைபெறும். இதில் தவறு எதுவும் நடந்தால், பார்வையாளரிடம் புகார் அளிக்கலாம். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வினியோகம் செய்தது போக மீதமுள்ள பூத் சிலிப்புகளை யாரிடமும் வழங்காமல், அவர்களே வைத்திருக்க வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர், தேர்தல் அன்று ஓட்டுச்சாவடி முன், பூத் சிலிப் வாங்காதவர்களுக்கு வழங்குவார். அரசியல் கட்சிகள் கொடுக்கும், பூத் சிலிப் செல்லாது. இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
No comments:
Post a Comment