Pages

Saturday, February 20, 2016

TNPTF NEWS


வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக  ஒத்தி வைப்பு. அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டக்குழு அறிவிப்பு.

இன்று நடைபெற்ற அரசு ஊழியர் மற்றும் அனைத்து ஆசிரியர் போராட்டக்குழு தற்பொழுது நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. நிதியமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு நமது போராட்டக்குழுவை தற்பொழுது பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. முதல்வரின் அறிவிப்புகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து அறிக்கையையும் அமைச்சர் குழு கோரியுள்ளது.

முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த நமது அறிவிப்புகளை சில திருத்தங்களுடன் அரசாணை வெளியிடவும், மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை மையப்படுத்தியும் நமது போரட்டக்குழு சார்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையுடன் மாநில பொறுப்பாளர்கள் இன்று இரவு 8.00 மணிக்கு அமைச்சர் பெருமக்களை சந்திக்கின்றனர். அதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் கோரிக்கைள் நிறைவேறாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போராட்டக்குழு கூடி முடிவு செய்யும்.

தகவல்: திரு.செ.பாலச்சந்தர், பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

No comments:

Post a Comment