Pages

Thursday, February 04, 2016

வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு


தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 2014 லோக்சபா தேர்தலின்போது, 65,616 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கூடுதலாக, 2,580 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனால், வரும் சட்டசபை தேர்தலின்போது, 68,196 ஓட்டுச் சாவடிகளில், வாக்குபதிவு நடைபெறும்.சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால், அவர்களை இடமாற்றம் செய்யும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன்படி, 99.5 சதவீத ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை, சரி பார்க்கும் பணி, சென்னையில், 8ம் தேதி துவங்குகிறது.

No comments:

Post a Comment