Pages

Monday, January 25, 2016

பத்தாம் வகுப்பில் கட்டாய தமிழ் தேர்வு: விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு


பத்தாம் வகுப்பில் கட்டாயமாகத் தமிழ் தேர்வு எழுத விலக்கு கோரியவர்களுக்கு விலக்கு அளிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால உத்தரவிட்டது.

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று 2006-இல் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், 2015-16-ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வின்போது தமிழ் தேர்வு எழுதுவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் இதற்காக ஒரு குழுவை அமைத்து விரைந்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞர் கிருஷ்ணா ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, விலக்கு கோரிய மாணவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்

No comments:

Post a Comment