டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, பிப்., 1ல், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தொடக்க கல்வி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று, முதலாம் ஆண்டு மற்றும், இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கு, அவர்களின் பயிற்சி நிறுவனங்களில், பிப்., 1 முதல், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் படி, தேர்வு முடிவுகளை அறியலாம்' என, கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment