Pages

Friday, November 06, 2015

டிஸ்லெக்சியா' மாணவர்கள்: ஆசிரியர்களுக்கு பயிற்சி


கற்றல் குறைபாடுள்ள, 'டிஸ்லெக்சியா' மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்புப் பயிற்சி அளிக்கிறது.தமிழகத்தில், தமிழ் வழியில் படிக்கும், 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில், 10 முதல், 15 சதவீதம் பேருக்கு, 'டிஸ்லெக்சியா' என்ற கற்றல் குறைபாடு உள்ளது.

இந்த மாணவர்கள் அறிவிலும், உடல் நலனிலும் மற்ற மாணவர்களை விட, நல்ல முறையில் இருந்தாலும், பாடங்களை புரிந்து படித்தல், மனப்பாடம் செய்தல் போன்றவற்றில் திணறுகின்றனர். அவர்களுக்கு, சரியான முறையில் பாடம் கற்பித்தால், எந்த குறைபாடும் இன்றி, மற்ற மாணவர்களை விட, ஒரு படி மேலே படிக்க முடியும். எனவே, இத்தகைய மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விதம் குறித்து, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சென்னை 'டிஸ்லெக்சியா' சங்கம் சார்பில், இன்று சிறப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, தி.நகர்., வாணி மகாலில் இந்த பயிற்சி வகுப்பு நடக்கிறது. சென்னை, ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள், சிறப்புக் கல்வியாளர் ஹரிணி மோகன் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர்.-

No comments:

Post a Comment