Pages

Saturday, July 25, 2015

கடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கையில் ஆசிரியர் பணிநிரவல் செய்ய TNPTF எதிர்ப்பு

முந்தைய ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆக., 1 மாணவர் வருகை அடிப்படையில் அடுத்த ஆண்டிற்கான பணியிடங்கள் கணக்கிடப்படுகின்றன.

இந்த பணியிடங்கள் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் மற்ற பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யப்படு கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை மாறுபடும்போது முந்தைய ஆண்டு அடிப்படையில் பணியிடங்களை நிர்ணயம் செய்வது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் குறைவான ஆசிரியர்களும், குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களும் பணிபுரியும் நிலை உள்ளது. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நடப்பாண்டு மாணவர்கள் வருகை அடிப்படையில் பணிநிரவல் செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலர் அமல்ராஜ் கூறியதாவது: சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் சென்ற ஆண்டு அடிப்படையில் பணிநிரவல் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment