Pages

Monday, July 27, 2015

தமிழக பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: அரசு அறிவிப்பு

தமிழக பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: அரசு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் மறைவையட்டி, தமிழகம் முழுவதும் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்  மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் எனும் இடத்தில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். அப்போது மேடையில் இருந்த அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு சரிந்தார்.

உடனடியாக அவர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அப்துல்கலாம் இறந்துவிட்டார் என்பதை உறுதிசெய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மாணவர்கள் மேல் மிகுந்த பாசமுள்ளவர். அதிகமாக மாணவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க விரும்புவார். இந்தநிலையில் அவரது மறைவு மாணவர்கள் சமுதாயத்திடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் அவரது மறைவுக்கு தமிழக அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்றிரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment