Pages

Tuesday, June 09, 2015

பழைய வாக்காளர்களுக்கும் வண்ண ஸ்மார்ட் கார்டு

பழைய வாக்காளர்களுக்கும் வண்ணமயமான 'ஸ்மார்ட் கார்டு' வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஜன.,5 முதல் வாக்காளர்களுக்கு'ஸ்மார்ட் கார்டு' வடிவிலான அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இவற்றில் உள்ள 'பார் கோடில்' வாக்காளரின் அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டை குஜராத் அகமதாபாத்தில் தயாரிக்கப்படுகிறது.

இதனால் 2014 அக்.,15 பின் சேர்ந்த புதிய வாக்காளர்களுக்கு மட்டுமே 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படுகின்றன. அதற்கு முன் சேர்ந்த பழைய வாக்காளர்களிடம் கருப்பு, வெள்ளை நிற காகிதத்தில் 'லேமினேசன்' செய்யப்பட்ட சாதாரண அடையாள அட்டைகளே உள்ளன. தற்போது அவற்றையும் 'ஸ்மார்ட் கார்டில்' வடிவில் வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கு்'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வாக்காளர் பட்டியல், ஆதார் எண் ஒப்பிடும் பணி முடிந்தவுடன் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். பழைய வாக்காளர்கள் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்,” என்றார்.

No comments:

Post a Comment