Pages

Friday, May 29, 2015

ஜூன் முதல் ரயில் கட்டணம் உயர்வு

ரயில் பயணிகளின் தலையில் மீண்டும் கட்டண உயர்வை சுமத்த, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சாதாரண பெட்டிகளுக்கான கட்டணத்திற்கு வசூலிக்கப்படும் சேவை வரி, ஒன்றரை மடங்கு வரை உயர்த்தப்படவுள்ளது. 'ஏசி' பெட்டிகளில் இந்த கட்டண உயர்வு, 30 முதல், 100 ரூபாய் வரை அதிகரிக்கிறது. கடந்த ரயில்வே பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சேவை வரியை, 12.36 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்துவதற்கான அறிவிப்பு, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் 1 முதல், சேவை வரியை உயர்த்த திட்டமிட்டு இருந்தாலும், இதுவரை, 'சர்வரில்' அதற்கான மாற்றம் செய்யப்படவில்லை. புதிய கட்டணத்திற்கான மாற்றம் செய்யப்படும் வரை, பயணிகளிடம் இருந்து, பழைய கட்டணமே வசூலிக்கப்படும். ஜூன் 1ம் தேதி அல்லது அதற்கு பின், பழைய கட்டணத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து, மீதி தொகை வசூலிக்கப்படும். இதுகுறித்து, அனைத்து மண்டலங்களுக்கும் எழுத்து மூலமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment