Pages

Monday, May 25, 2015

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு செக்

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ‘செக்’ கூடுதல் ஆசிரியர் பணியிடத்தை சரண்டர் செய்ய அரசு உத்தரவு

அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை விட கூடுதலாக உள்ள ஆசிரியர்களை திரும்ப ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின்  எண்ணிக்கை 20 ஆயிரம். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 30 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதாச்சாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.  இந்நிலையில், நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாக தெரிய  வந்துள்ளது.

இது மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரப்படி மிக கூடுதல் என்றும், இதனுடன் நிதியுதவி பள்ளிகளுக்கான பிற செலவினங்களும் அதிகம் என்றும் அரசு  கருதுகிறது. இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவை தவிர்க்க தற்போது அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை  மிகதுல்லியமாக கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது

. எனவே, அரசு நிதியுதவி பள்ளிகளை நடத்தி வரும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள்,  சமுதாய அமைப்புகள் அனைத்தும் தங்கள் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு கூடுதலாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க  வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு திரும்ப பெறும் ஆசிரியர்கள் காலியாக உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில்  பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment