தமிழகம் முழுவதும், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்று, கடைசி சிறப்பு வாக்காளர் முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும், வாக்காளர்களிடம், அவர்களின் ஆதார் எண், மொபைல் எண், இ-மெயில் முகவரி, போன்ற விவரங்களை சேகரிக்கும் பணி, மார்ச் மாதம் துவங்கியது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று, விவரங்களை சேகரித்தனர். அத்துடன், வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெற்றனர். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வரும்போது, வீட்டில் இல்லாதவர்களுக்காக, நான்கு சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மூன்று முகாம் நடத்தப்பட்டுள்ளது. நான்காவது முகாம், இன்று, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நடைபெற உள்ளது என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment