Pages

Monday, May 04, 2015

ப்ளஸ் டூ தேர்வு முடிவு குறித்த ஆலோசனைக்கு 104 சேவையை அழைக்கலாம்

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் குறித்த பயத்துக்கு ஆலோசனை பெறுவதற்கு தமிழக அரசின் 104 தொலைபேசி சேவையை அழைக்கலாம்.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி(வியாழக்கிழமை) வெளியாக உள்ளன.
தேர்வு முடிவுகள் குறித்த குழப்பம், பயம் மன அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு தமிழக அரசின் தொலைபேசி சேவையை அழைக்கலாம். தேர்வு முடிவுகள் குறித்த உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கு 25 பேர் கொண்ட குழுவினர் நியமக்கப்பட்டுள்ளனர்.
24 மணி நேரமும் மூன்று பிரிவுகளாக இந்த மையம் செயல்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு உளவியல் மருத்துவர், இரண்டு உளவியல் நிபுணர்கள், மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.
இது குறித்து 104 சேவை மைய அதிகாரிகள் கூறியது:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாவதைத் தொடர்ந்து சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள், அதனைத் தொடர்ந்து மே 21-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. எனவே மே மாதம் இறுதி வரை இந்த சிறப்பு ஆலோசனை குழு செயல்படும்.
தேர்வுக்கு முன்பு, தேர்வு சமயம் சுமார் 8 ஆயிரம் பேர் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர். மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment