Pages

Thursday, April 30, 2015

TRAI புதிய உத்தரவு

இணைய தள சேவைக்கான எவ்வளவு டேட்டா பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவலை வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி நிறுவனங்கள் உடனுக்குடன் தெரிவிப்பதை ட்ராய் கட்டாயமாக்கியுள்ளது.
டேட்டா தொடர்பை செயல்படுத்தும் முன் வாடிக்கையாளரின் அனுமதி பெற வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அளவுக்கு டேட்டா பேக் பெறாத வாடிக்கையாளர்கள், நேரடியாக இணைய தள சேவையை பயன்படுத்தும்போது ஒவ்வொரு 5 ஆயிரம் கிலோபைட் முடியும்போதும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அளவு டேட்டா பேக் பெற்று பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவிகித டேடா பயன்படுத்தப்பட்டதும் தகவல் தெரிவிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிறகு, 90 சதவிகிதம், 100 சதவிகிதத்தை எட்டும்போதும் தெரிவிக்க வேண்டும் என ட்ராய் உத்தரவிட்டுள்ளது. முறையான தகவல் வராத காரணத்தால் டேட்டா பயன்பாடு தெரியாமல்,தங்கள் தொலைபேசி கட்டணம் முழுவதையும் இழக்க நேரிடுவதாக ட்ராய்க்கு வாடிக்கையாளர்கள் புகார் அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் தொலைபேசி நிறுவனங்களுக்கு ட்ராய் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment