Pages

Friday, April 17, 2015

வங்கியில் பொதுவாக பணம் செலுத்த ரிசர்வ் வங்கி திட்டம்

பொதுவான பணம் செலுத்தும் இயந்திரம் அறிமுகம் : ரிசர்வ் வங்கி திட்டம்

எந்த வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தும் வகையில் பொதுவான இயந்திரத்தை அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

வரிசையில் நின்று விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தும் நடைமுறை, தற்போது பெருமளவு குறைந்துவிட்டது.

இதற்கு பதிலாக இணைய வழி பரிவர்த்தனைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தவிர, தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போதுள்ள நடைமுறையில் ஒரு வங்கி கணக்கில் இருந்து அதே வங்கிக் கணக்குகளில் மட்டுமே உடனடியாக பணம் செலுத்த முடியும்.

ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதைப் போல பணம் செலுத்துவதை பொதுவாகப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.

இந்நிலையில் அனைத்து வங்கிக் கணக்குகளையும் கையாளும் வகையிலான பொதுவான பணம் செலுத்தும் இயந்திரத்தை நாடு முழுவதும் அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment