Pages

Monday, April 20, 2015

9ம் வகுப்பில் இனி ஆல் பாஸ் கிடையாது


ஒன்பதாம் வகுப்பு வரை நூறு சதவீத தேர்ச்சி என்ற நடைமுறையை ரத்து செய்து விட்டு, தேர்ச்சி விகிதத்தை குறைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரையும் 9ம் வகுப்பு வரை ‘பெயில்’ ஆக்க கூடாது என அரசு உத்தரவு உள்ளது. இந்த நடைமுறையால் மாணவர்கள் கல்வித்தரம் கேள்விக்குறியாகி வருகிறது.

இந்த நடைமுறையால் 50 முதல் 60 சதவீத மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை எழுத, படிக்க கூடத் தெரியாமல் 10ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்று வருகின்றனர். பொதுத் தேர்வில்பலர் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கல்வித்துறை நடப்பு ஆண்டு 9ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி என்ற நடைமுறையை நிறுத்தி, தகுதி குறைவாக உள்ள மாணவர்களை வடிகட்ட உத்தரவிட்டுள்ளது.

தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக குறைக்கவும் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், “9ம் வகுப்பு வரை `ஆல் பாஸ்’ நடைமுறையால் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் தேர்விற்கு மட்டும் வந்து செல்லுகின்றனர். சில ஆசிரியர்களும் பாடங்களை முறையாக நடத்துவதில்லை. 5, 8ம் வகுப்பில் `ஸ்கிரின் டெஸ்ட்’ வைத்து மாணவர்களின் திறனைக் கண்டறிந்து மேல் வகுப்பிற்கு அனுப்ப வேண்டும்” என்றனர்.

No comments:

Post a Comment