Pages

Thursday, April 02, 2015

ப்ளஸ் 2 தேர்வுக்கு முன் ஜாதி சான்று வழங்க ஏற்பாடு

பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு முன் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி சான்றுகளை வழங்க வருவாய்த்துறை ஏற்பாடு செய்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட்டபின்பே ஜாதி, இருப்பிடம் போன்ற சான்றுகளை கேட்டு மாணவர்கள் தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கின்றனர்.

ஒரே சமயத்தில் அதிகமான விண்ணப்பங்கள் வருவதால் சான்றுகள் வழங்க தாமதம் ஏற்பட்டது. இதனை தவிர்க்க தேர்வு முடிவுக்கு முன் தாலுகா அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல்படும் பொதுசேவை மையம் மூலம் 'ஆன்-லைனில்' சான்றுகளை வழங்க வருவாய்த்துறை ஏற்பாடு செய்துள்ளது.இதில் ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி சான்றுகளை பெற்று கொள்ளலாம். ஏற்கனவே சான்று பெற்றோர் அதன் நகல்களை பெறலாம். மேலும் மெய்த்தன்மை குறித்து சந்தேகம் ஏற்படாத வகையில் சான்றுகளில் ரகசிய குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிபார்த்து கொள்ளலாம் என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment