மேற்கூரை விரிசல் உள்ள பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.பராமரிப்பு இல்லாததால் ஏராளமான ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் சேதமடைந்துள்ளன. புதிய வகுப்பறை கட்டடங்களில் கூட மேற்கூரையில் விரிசல் உள்ளது. இதனால் மேற்கூரை விரிசல் உள்ள பள்ளிகளில் பாடம் நடத்தக்கூடாது. வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை இடித்துவிட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏப்ரலுக்குள் கட்டங்களை சீரமைத்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். இதனால் முழு ஆண்டு தேர்வு முடிவதற்குள் பழுதடைந்த கட்டடங்கள் எஸ்.எஸ்.ஏ., பராமரிப்பு நிதி மூலம் சீரமைக்கப்பட உள்ளன. இதற்கான ஆலோசனை களை வழங்கி உள்ளோம், என்றனர்.
No comments:
Post a Comment