Pages

Saturday, February 28, 2015

பட்ஜெட்டில் வரி விலக்கு

4,44,200 ரூபாய்க்கு வருமான வரி சலுகை பெறுவது எப்படி?


சேமிப்பு மற்றும் மருத்துவ காப்பீட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு பல வித வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. மருத்துவ காப்பீடு பிரிமீயத்துக்கான வரி விலக்கு வரம்பு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவ காப்பீடு எடுக்க அனுமதி இல்லை. ஆனால், அவர்களின் மருத்துவ செலவுக்கு ரூ.30 ஆயிரம் வரை வரிவிலக்கு பெற அனுமதிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு சில குறிப்பிட்ட நோய்களின் மருத்துவ செலவுக்கான வரி விலக்கு ரூ.60 ஆயிரத்திலிருந்து ரூ.80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சுகன்ய சம்ரிதி திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் வரி செலுத்தத் தேவையில்லை. பென்ஷன் நிதி திட்டம், புது பென்ஷன் திட்டம் ஆகியவற்றில் 80சிசிடி பிரிவின் கீழ் வரிவிலக்குக்கான வரம்பு ஸி1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

வரிவிலக்கு விவரங்கள்:
80சி பிரிவின் கீழ் விலக்கு
(காப்பீடு, மியூச்சுவல் பண்ட் மற்றும் பிஎப் முதலீடுகள்)  ரூ.1,50,000
   
80சிசிடி பிரிவின் கீழ் விலக்கு
(பென்ஷன் திட்ட முதலீடு)    ரூ.50,000

வீட்டு கடன் வட்டிக்கான விலக்கு    ரூ.2,00,000

மருத்துவ காப்பீடு பிரீமியத்துக்கு
80டி பிரிவின் கீழ் விலக்கு    ரூ.25,000

போக்குவரத்து படிக்கான விலக்கு    ரூ.19,200

No comments:

Post a Comment