Pages

Wednesday, February 25, 2015

ரயில்வே பட்ஜெட்

பயணிகள் கட்டணம் உயரவில்லை; ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தற்போது தாக்கல் செய்து, புதிய ரயில், பயணிகளுக்கான புதிய வசதிகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றி வருகிறார்.

பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

* நாட்டின் சமூக - பொருளாதார வளர்ச்சியில் ரயில்வே மிகப்பெரிய பங்காற்றுகிறது. ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்.

*  ரயில் பாதை அகலமாக்கல் மின்மயமாக்கல் அதிகரிக்கப்படும்

*  ரயில்வே துறையில் கட்டுமானம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பல முடங்கிக் கிடக்கின்றன .

* ஏற்கெனவே உள்ள வழித் தடங்களில் கூடுதல் ரயில்கள்  இயக்கப்படும்.

* ராஜ்தானி சதாப்தி போன்ற விரைவு ரயில்கள்  அதிகம் தேவை.

* சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை.

கட்டண உயர்வில்லை

* பயணிகள் கட்டணத்தில் மாற்றமில்லை.

* அடுத்த 5 ஆண்டுகளுக்கு 4 அம்ச இலக்குகள்.

* கூடுதல் முதலீடுகளால் வேலை வாய்ப்புகள் பெருகும்.

* 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற திட்டம்.

பசுமை கழிவறைகள்

* ரயில் மற்றும் ரயில் நிலையங்களின் தூய்மைக்கென தனி துறை உருவாக்கம்.

* 650 ரயில் நிலையங்களில் புதிய பசுமை கழிவறைகள்.

* 17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைப்பு

குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்

* 24 மணிநேரமும் செயல்படும் குறை தீர் மையங்கள்.

*  நாடு முழுமைக்கும் ரயில்வே உதவி எண் 138

* மார்ச்-1 முதல் குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்

No comments:

Post a Comment