Pages

Thursday, February 12, 2015

மாநில பட்ஜெட்டை எதிர்நோக்கியுள்ள 50 ஆயிரம் ஆசிரியர்கள்

பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கும் அரசாணை தொடர்பான அறிவிப்பு, மாநில பட்ஜெட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில், 50 ஆயிரம் ஆசிரியர்கள் காத்துள்ளனர்.

கடந்த, 2003 முதல் 2006 வரை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், 40 ஆயிரம் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம், பதிவு மூப்பு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், 10 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்கள் என, 50 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் 3,000 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4,000 ரூபாய், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4,500 ரூபாய் என, தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வந்த அவர்களை, முந்தைய தி.மு.க., அரசு, கடந்த 2006 ஜூன் 1ம் தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்கி ஆணை பிறப்பித்தது. இருப்பினும், தங்களது பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் கேட்டு, ஆசிரியர்கள் போராடி வந்தனர்; அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

கடந்த, 2011 தேர்தல் அறிக்கையில்,‘அரசு ஆசிரியர்கள் பணி வரன்முறை செய்யப்படுவர்’ என, அ.தி.மு.க., வாக்குறுதி அளித்திருந்தது.

No comments:

Post a Comment