தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மாநில அளவிலான 11-ஆவது அமைப்புத் தேர்தல் திருப்பூர் தெற்கு ரோட்டரி அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தலில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 160 பேர் சேர்ந்து மாநில நிர்வாகிகளை தேர்வு செய்தனர். மாநிலத் தலைவராக மோசஸ், மாநிலப் பொதுச்செயலாளராக பாலசந்தர், பொருளாளராக ஜீவானந்தம், துணைப் பொருளாளராக மயில், அகில இந்தியப் பள்ளி கூட்டமைப்பு பொதுக்குழு உறுப்பினராக சரவணன், மாநில நிர்வாகிகளாக மலர்விழி, மணிமேகலை, சித்திரா, தமிழ்செல்வி உள்ளிட்ட 19 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிர்வாகிகள் 2015-2018-ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகிப்பார்கள்.
No comments:
Post a Comment