Pages

Wednesday, December 24, 2014

காஸ் மானியத்துக்கு வங்கி கணக்கு இணைப்பை அறிவது எப்படி?

Dial *99*99# from your Mobile handset

சமையல் காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இலவச எஸ்.எம்.எஸ்., சேவையை அறிமுகம் செய்துள்ளது. இச்சேவையை, ஆதார் எண் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். காஸ் மானியம் பெற, ஆதார் எண்ணோடு, வங்கிக் கணக்கு எண் அளிக்க வேண்டும்.

ஆதார் எண் இல்லாதவர்கள், வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் கொடுக்க வேண்டும். ஜனவரி முதல், இந்த நடைமுறை அமலுக்கு வருவதால், இம்மாத இறுதிக்குள், ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை, காஸ் முகமை, வங்கியிடம் அளிக்கும் பணி, மும்முரமாக நடக்கிறது. காஸ் முகமை மற்றும் வங்கியில் இந்த விவரங்களை அளித்த பின், காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டதா என்பதை அறிய, இவலச எஸ்.எம்.எஸ்., சேவையை, பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள், *99*99# என, மொபைல் போனில் அழுத்தினால், 12 இலக்கம் கொண்ட ஆதார் எண் கேட்கும்.

ஆதார் எண்ணை பதிவு செய்தால், காஸ் மானியம் பெற வங்கிக் கணக்கு எண், இணைக்கப்பட்டு விட்டதா என்ற தகவலை அறியலாம். எஸ்.பி.ஐ., மறுப்பு: இதற்கிடையே, காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கை இணைக்க, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.,) வாடிக்கையாளர்களிடம், கட்டணம் வசூலிப்பதாக, புகார் எழுந்தது. இப்புகாரை, வங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் மறுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், ''வங்கியின் எந்தக் கிளையிலும், காஸ் மானியத்துக்கு, வங்கிக் கணக்கை இணைக்க, கட்டணம் வசூலிப்பதில்லை. கட்டணம் வசூலித்து இருந்தால், அத்தொகை வாடிக்கையாளர்களுக்கு, திருப்பி அளிக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment