Pages

Thursday, December 11, 2014

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

    வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்க, மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தங்களது பதிவைப் புதுப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பைப் பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்புப் புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்தச் சலுகையைப் பெறவிரும்பும் மனுதாரர்கள் மூன்று மாதங்களுக்குள் அதாவது அடுத்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் பதிவஞ்சல் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் http:tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாக பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment