தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு நடப்பு நிதியாண்டில் 8.75 சதவிகித வட்டி வழங்க மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது.
முன்னதாக நடப்பு 2014 - 15 நிதியாண்டுக்கு 8.75 சதவிகித வட்டி தரலாம் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பரிந்துரைத்திருந்த நிலையில் அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்ட அதே வட்டி விகிதமே நடப்பாண்டுக்கும் வழங்கப்பட உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் இம்முடிவால் 5 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள்.
No comments:
Post a Comment