Pages

Monday, December 01, 2014

ஜனவரி 5-ல் இறுதி வாக்காளர் பட்டியல்: சந்தீப் சக்சேனா தகவல்

திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது வரை எண்பத்தாறு சதவீதம் வரை முடிவடைந்துள்ளதாகக் கூறினார். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து பணிகளும் நிறைவுற்று திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார் அவர்.

புதிதாக விண்ணப்பித்த இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட அனைவருக்கும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என சக்சேனா தெரிவித்தார். தற்போதுள்ள கருப்பு வெள்ளை வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து போனால் ,புதிய அட்டை கேட்டு விண்ணப்பிப்பவருக்கு ,வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க ஆணையம் பரிசீலித்து வருவதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.

No comments:

Post a Comment