நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பள்ளியில் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தையடுத்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சகம், சில நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பள்ளிகளைச் சுற்றிலும் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிகளில் இருந்து வெளியேற 3 அல்லது 4 இடங்களில் வழிகள் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசர தேவைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி வசதிகளை ஏற்படுத்த வேண்டும், எனவும் அசம்பாவித சம்பவம் நிகழும் போது அதிலிருந்து தற்காத்துக் கொள்வது தொடர்பான பயிற்சியை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment