Pages

Thursday, December 04, 2014

அகஇ - 06.12.2014 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; பயிற்சி வழக்கம் போல் நடைபெறும் -courtesytnkalvi

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 06.12.2014 அன்று "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கார்த்திகை தீப திருவிழா வருவதால், அன்றைய தினத்தில் நடைபெறவுள்ள குறுவளமைய பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

ஆனால் பயிற்சி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒத்திபோக வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment