Pages

Monday, November 03, 2014

பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இதில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்து, பணிபுரிந்து கொண்டு இருப்பவர்கள் மட்டுமே இந்தப் படிப்புகளில் சேர முடியும். கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

மூன்றரை ஆண்டுகள் கொண்ட இந்தப் படிப்புக்கான வகுப்புகள் தினமும் மாலை 6.15 முதல் இரவு 9.15 வரை நடத்தப்படும்.

படிப்பில் சேர விரும்புபவர்கள் ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன்ல்ற்க்ஷங்2014 என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்து, அதை நவம்பர் 22-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை, உரிய கட்டணத்துக்கான வரைவோலையுடன் -இயக்குநர், மாணவர் சேர்க்கை மையம், அண்ணா பல்கலை, சென்னை - 25- என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நவம்பர் 28 கடைசித் தேதியாகும்.

கலந்தாய்வு அழைப்புக் கடிதம் நேரடியாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment