Pages

Friday, November 14, 2014

பாலியல் கல்வி குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை பாடமாக சேர்ப்பது குறித்து 8 வாரங்களுக்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும், அவற்றை பாடமாக புத்தகத்தில் சேர்க்கவும் கோரி, வழக்கறிஞர் சித்ராதேவி என்பவர் கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளார்.

ஓராண்டு கடந்தும் அந்த மனு மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக 8 வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment