வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க , நீக்க மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இன்று கடைசி நாள் என்ற போதிலும்,இணையதளம் மூலமாக தொடர்ந்து விண்ணப்பிக்க முடியும்.
இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய திருத்தப் பணி இன்றுடன் முடிவடைகிறது.
அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சிகளின் மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் பதிவு செய்தவர்களுக்கு ஜனவரி மாதம் இருபத்தைந்தாம் தேதி, தேசிய வாக்காளர் தினத்தன்று வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
இந்த வாய்ப்புகளை தவறவிட்டவர்கள் இணையதளம் மூலமாக பெயர்களை சேர்க்கவோ ,நீக்கவோ அல்லது திருத்தங்களை மேற்கொள்ளவோ விண்ணப்பிக்க முடியும்.
Pages
▼
No comments:
Post a Comment