இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறும் அறிஞர்களை நோபல் பரிசுக்குழுவினர் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோவுக்கு இந்த ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின்போது, பிரான்ஸ் நாட்டை ஜெர்மனியின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்த காலக்கட்டத்தின் நிகழ்வுகளை தனது படைப்பாற்றல் மூலம் தன் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்காக இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கபடுகிறது” என்று நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment