Pages

Tuesday, July 22, 2014

ஜப்பானில் விளையாட்டு போட்டி: மாணவர்களை தேர்வு செய்ய உத்தரவு

  கிழக்காசிய மாணவர் மற்றும் இளைஞர்களுக்கான போட்டிகள் ஜப்பானில் அக்டோபரில் நடக்கிறது. இதில் மாவட்ட வாரியாக இரு மாணவர்கள் பங்கேற்கலாம். இதற்கான செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். இதுகுறித்து முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பிய சுற்றறிக்கை:

கிழக்காசிய மாணவர் மற்றும் இளைஞர்களுக்கான போட்டிகள் ஜப்பானில் நடக்க உள்ளன. அதில் பங்கேற்க கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில், மாவட்ட, மாநில அளவில் சிறந்து விளங்கும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஒரு மாணவர், ஒரு மாணவி என மாவட்டத்திற்கு இருவரை தேர்வு செய்ய வேண்டும். ஏற்கனவே இப்போட்டிக்கு சென்றுவந்த மாணவர்களின் பெயர்கள் இடம் பெறக்கூடாது. www.mhrd.gov.in என்ற இணையதளமுகவரியில் மாணவர்களுக்கான விசா மற்றும் நுழைவுப்படிவம் தரப்பட்டுள்ளது. விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் இரு ஆசிரியர்களின் பெயரையும் குறிப்பிட வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 'பாஸ்போர்ட்' பெற்றிருக்க வேண்டும். போட்டிக்கு செல்வதற்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment