Pages

Saturday, July 19, 2014

அரசுப் பள்ளிகளுக்கு அதிக உதவிகளைச் செய்து ஊக்குவித்தால் மட்டுமே அரசு கல்வி நிலையங்களைக் காப்பாற்ற முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி

மாணவர்கள் வராததால் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக செய்திகள் வருகின்றன. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள அரசு, அரசு உதவி பெறும் 31 ஆயிரம் பள்ளிகளில் 42 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு 2 லட்சம் ஆசிரியர்களுடன் 60 லட்சம் மாணவர்கள் படித்து வந்தனர். இந்தக் காலகட்டத்தில்தான் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது. வருங்காலத்தில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து ஒட்டுமொத்த பள்ளிக் கல்வியே தனியார் வசம் போய்விடும் என்ற நிலை இருப்பதாகக் கூறுகிறார்கள்.

அரசின் கொள்கைகளும் நடைமுறைச் சிக்கல்களும்தான் இற்குக் காரணம் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அரசு தரும் ஊக்கத்தைக் குறைத்து, அரசுப் பள்ளிகளுக்கு மேலும் அதிக உதவிகளைச் செய்தால் மட்டுமே அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற முடியும். வயது வரம்பு கூடாது: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கும், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கும் வயது வரம்பு 57 ஆக இருக்கும்போது, பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு மட்டும் திடீரென வயது வரம்பு 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பட்டதாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் 57 வயது வரை பணியில் சேரலாம். ஆனால், பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு மட்டும் வயது உச்ச வரம்பு குறைக்கப்பட்டுள்ளது ஏன் எனக் கேட்பது நியாயம்தான் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment