Pages

Sunday, July 06, 2014

பள்ளிகளில் மின் சாதனங்கள் இயக்க மாணவர்களுக்கு தடை

:பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை:பள்ளிகளில், நீர்தேக்க தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள் இருந்தால், அவற்றை மூடவேண்டும். மின் இணைப்பு, சுவிட்ச் பாக்ஸ் சரியாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். பள்ளிகளில், மாணவர்களை கொண்டு, மின் சாதனங்களை இயக்கக் கூடாது. சேதமான பள்ளி கட்டடம், சுவர்கள், ஆய்வு கூடங்கள், கம்ப்யூட்டர் அறைகளில், துண்டித்த நிலையில் உள்ள மின் ஒயர்களை அப்புறப்படுத்த வேண்டும

். பள்ளி கட்டட மேல் மாடிக்குச் செல்லும் பாதைகளை மூடவேண்டும். ரோட்டோர பள்ளிகள் முன், வேகத்தடை அமைத்து, தினமும் ஆசிரியரை நியமித்து, மாணவர்களை ரோட்டை கடக்க செய்ய வேண்டும். கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களுக்கு மாணவர்களை அனுமதிக்க கூடாது.பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் இருந்தால், அவற்றை அகற்ற வேண்டும். முதலுதவி பெட்டி அவசியம் இருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment