Pages

Thursday, July 31, 2014

பெட்ரோல் விலை குறைப்பு; டீசல் விலை அதிகரிப்பு

நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.09 குறைக்கப்பட்டது. அதேவேளையில், டீசல் விலையில் வழக்கம்போல் 50 பைசா அதிகரிக்கப்பட்டது.

உள்ளூர் வரி மற்றும் வாட் வரிக்கு ஏற்ப மாறுபடும் இந்த புதிய விலை மாற்றம், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பெட்ரோல் விலை முதல் முறையாக குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உள்ளிட்ட சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அதன் அடிப்படையில், பெட்ரோல் விலை நாடு முழுவதும் லிட்டருக்கு ரூ.1.09 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.

இந்த விலைக் குறைப்பு, உள்ளூர் வரி மற்றும் வாட் வரிக்கு ஏற்ப அந்தப் பகுதிகளில் அமலுக்கு வருகிறது.

அதேநேரத்தில், வழக்கம்போல் இம்முறையும் டீசல் விலையில் 50 பைசா அதிகரிக்கப்பட்டது.

No comments:

Post a Comment