Pages

Friday, July 11, 2014

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி


சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.கே.கவுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ராஜேஷ்குமார் அகர்வால் கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை தற்காலிகமாக நீதிபதி எஸ்.கே.அக்னி கோத்ரி கவனித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
56 வயதாகும் நீதிபதி எஸ்.கே.கவுல் டெல்லியைச் சேர்ந்தவர். 1982 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி வழக்கறிஞரானார். டெல்லி உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் அவர் வழக்கறிஞராக பணிபுரிந்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு எஸ்.கே.கவுல் பஞ்சாப்–அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment