Pages

Wednesday, June 04, 2014

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் செல்போன் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இது சம்பந்தமான சுற்றறிக்கை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த சுற்றறிக்கை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இது பற்றி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணனிடம் கேட்ட போது அவர் கூறிய தாவது:–

பள்ளிக்கூடங்களில் செல்போன் பயன்படுத்துவதால் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

இதனால் பள்ளிக் கூடங்களுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதை ஆசிரியர்கள் மட்டும் அல்லாமல் மாணவ– மாணவிகளின் பெற்றோர்களும் கண்காணிக்க வேண்டும்.

இதைபோல ஆசிரியர்களும் வகுப்பறைகளில் செல்போன் பேசக்கூடாது. செல்போனை தங்களது ஓய்வறையிலேயே வைத்து விட்டு செல்ல வேண்டும்.

இது சம்பந்தமான தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment