இந்த விலை உயர்வு சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. மாநிலங்கள் விதிக்கும் வரிகள் சேர்க்கப்படாததால் இந்த விலை உயர்வு மாநில வாரியாக வேறுபடும். எண்ணெய் நிறுவனங்களுடன் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டது. டீசலுக்கு அளிக்கப்படும் மானியத்தால் மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பை குறைப்பதற்காக கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மாதந்தோறும் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தும் திட்டத்தை 2013ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில், மத்தியில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசும் இந்த விலை உயர்வை மேற்கொண்டுள்ளது. இதனால் மாதந்தோறும் டீசல் விலை உயர்வுத் திட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 15 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன் மூலம் லிட்டருக்கு இதுவரை ரூ. 9.55 காசுகள் உயர்ந்துள்ளன. மாநிலம் - பழைய விலை - புதிய விலை தில்லி ரூ. 56.71 ரூ. 57.28 சென்னை ரூ. 60.50 ரூ. 61.97 மும்பை ரூ. 65.21 ரூ. 65.84 கொல்கத்தாரூ. 61.38 ரூ. 61.97
Pages
▼
No comments:
Post a Comment